/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீரன் சின்னமலைக்கு வீர வணக்கம்; பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு
/
தீரன் சின்னமலைக்கு வீர வணக்கம்; பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு
தீரன் சின்னமலைக்கு வீர வணக்கம்; பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு
தீரன் சின்னமலைக்கு வீர வணக்கம்; பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு
ADDED : ஆக 01, 2025 11:10 PM
திருப்பூர்; தீரன் சின்னமலைக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க, பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்களுக்கு கொங்கு நாடு விவசாயிகள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இதன் மாநில தலைவர் கொங்கு முருகேசன், பொதுச்செயலாளர் கொங்கு ராஜாமணி அறிக்கை:
ஆங்கிலேயரை எதிர்த்து போராடி, வீர மரணமடைந்தவர், தீரன் சின்னமலை. அவரது 220ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி, வரும் 3ம் தேதி (நாளை) நடைபெற உள்ளது.
கொங்குநாடு விவசாயிகள் கட்சி சார்பில், ஆண்டு தோறும் ஆடி 18ம் தேதி, தீரன் சின்னமலைக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டுவருகிறது. அந்தவகையில், காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் பிரிவில், வரும் 3ம் தேதி (நாளை), காலை, 9:00 முதல் 10:00 மணி வரை, வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், விவசாயிகள் பங்கேற்கின்றனர்.
தொடர்ந்து, ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.

