/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஐகோர்ட் வக்கீல் கொலை; சடலத்தை வாங்க மறுப்பு
/
ஐகோர்ட் வக்கீல் கொலை; சடலத்தை வாங்க மறுப்பு
ADDED : ஜூலை 30, 2025 01:07 AM

திருப்பூர் ; ஐகோர்ட் வக்கீல் கொலையில் பள்ளி தாளாளர் மகனையும் வழக்கில் சேர்க்க வலியுறுத்தி, குடும்பத்தினர் சடலத்தை வாங்க மறுத்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம், முத்து நகரை சேர்ந்த மாற்றுத்திறனாளியான ஐகோர்ட் வழக்கறிஞர் முருகானந்தம், 41, சொத்து பிரச்னை காரணமாக சொந்த சித்தப்பாவான பள்ளி தாளாளர் தண்டபாணி, 65, என்பவரால் ஏற்பாடு செய்யப்பட்ட கூலிப்படையினரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதில், தண்டபாணி, கூலிப்படையினர் உட்பட ஆறு பேர் போலீசில் சரணடைந்தனர். இந்த வழக்கில் வெளிநாட்டில் உள்ள தண்டபாணியின் மகனையும் சேர்க்க வலியுறுத்தியும், சி.பி.ஐ., விசாரிக்க வலியுறுத்தியும், திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட முருகானந்தம் உடலை, குடும்பத்தினர் பெற மறுத்தனர்.
போலீசார் கூறுகையில், 'இரு வாரங்களாக முருகானந்தத்தை பின் தொடர்ந்து, கூலிப்படை கும்பல் நோட்டமிட்டு கொலையை அரங்கேற்றியுள்ளனர். தொடர்புடைய மேலும் நான்கு பேரை தேடி வருகிறோம்' என்றனர்.