நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில்வழி அடுத்த அமராவதிபாளையத்தில், திங்கள்தோறும் மாட்டுச்சந்தை நடக்கிறது. வழக்கமாக, 850 முதல், 920 மாடு சந்தைக்கு வரும்.
நேற்று, கன்றுக்குட்டி, 2,500 - 4,000 ரூபாய், காளை, 20 ஆயிரம் - 28 ஆயிரம் ரூபாய், எருதுகள் 26 ஆயிரத்து, 500 - 31 ஆயிரம், மாடுகள், 25 ஆயிரம் - 27 ஆயிரம் ரூபாய் என விற்பனையானது. நடப்பாண்டு இதுவரை இல்லாத வகையில் நேற்று, 986 மாடுகள் சந்தைக்கு வந்திருந்தன. மொத்தம் 1.95 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக, மாட்டுச்சந்தை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.