ADDED : ஏப் 21, 2025 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி, 10வது வார்டுக்குட்பட்ட ஆத்துபாளையம் ரோட்டில் உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
இதன் துவக்க விழா நடந்தது. எம்.பி., சுப்பராயன், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் திறந்து வைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தனர். மண்டல தலைவர் உமாமகேஸ்வரி, கவுன்சிலர்கள் பிரேமலதா, செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.