/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிக மின் அழுத்தம் மின் சாதனங்கள் சேதம்
/
அதிக மின் அழுத்தம் மின் சாதனங்கள் சேதம்
ADDED : மே 18, 2025 12:47 AM
பெருமாநல்லுார், : அதிக மின்னழுத்தம் காரணமாக மின் சாதனங்கள் பழுதடைந்தது குறித்து, மின்வாரியத்தில் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
திருப்பூர் ஒன்றியம், வள்ளிபுரம் ஊராட்சி, பழனியப்பா நகரில் நேற்று முன்தினம் மாலை மின்சாரம் ஏற்றம் இறக்கமாக இருந்து வந்தது. திடீரென அதிக மின்சாரம் வரவே செந்தில் குமார், என்பவரது வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்து தீ பிடித்தது.
அவிநாசி தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். அங்குள்ள பல வீடுகளில் இருந்த டி.வி, கிரைண்டர், வாசிங் மெஷின், டியூப் லைட், உள்ளிட்ட பல மின் சாதன பொருட்கள் பழுதாகின. பாதிக்கப்பட்ட பொது மக்கள் அனைவரும் பெருமாநல்லுார் மின் வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.