ADDED : நவ 20, 2025 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை புது பஸ் ஸ்டாண்டில், உயர்மின் விளக்கு அமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை புது பஸ் ஸ்டாண்டில், பழநி நோக்கி செல்லும் புறநகர் பஸ்கள், கிழக்கு பகுதியில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் நுாற்றுக்கணக்கான மக்கள் செல்கின்றனர்.
இங்கு உயர்மின் விளக்கு இல்லாததால், இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், பயணியர் அச்சமடைகின்றனர். எனவே, இதை நகராட்சி அதிகாரிகள் உடனடியாக அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

