ADDED : ஏப் 20, 2026 08:00 PM
அ நிறம் | அளவு
உடுமலை: உடுமலை புது பஸ் ஸ்டாண்டில், உயர்மின் விளக்கு இல்லாததால், இருள்சூழ்ந்து காணப்படுகிறது.
உடுமலை புது பஸ் ஸ்டாண்டில், பழநி நோக்கி செல்லும், புறநகர் பஸ்கள், கிழக்கு பகுதிக்கு செல்லும் டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஏராளமான மக்கள் இங்கு வருகின்றனர்.
இங்கு உயர்மின் விளக்கு இல்லாததால், இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, இதை நகராட்சி அதிகாரிகள் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
