/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உயர் விளைச்சல் தரும் நிலக்கடலை சாகுபடி!
/
உயர் விளைச்சல் தரும் நிலக்கடலை சாகுபடி!
ADDED : ஜன 14, 2025 09:25 PM
உடுமலை,:
'புதிய ரக நிலக்கடலை சாகுபடி வாயிலாக உயர் விளைச்சல் பெற முடியும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரவடிவேலு கூறியதாவது:
மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன், தேசிய சமையல் எண்ணெய் வித்து இயக்கம், திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் வாயிலாக, முக்கிய எண்ணெய் வித்து பயிரான நிலக்கடலை உற்பத்தியை அதிகரிக்க புதிய ரகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதோடு விதை உற்பத்திக்கு மானியம், விவசாயிகளுக்கு விதை வினியோக மானியம், நுண்ணுாட்டச்சத்து, உயிர் உரங்கள், உயிரியல் காரணிகள் மற்றும் உயிரியல் பூச்சி மருந்துகள், ஜிப்சம் உள்ளிட்ட இடுபொருட்கள் வழங்கப்படுகின்றன.
விளைச்சலை அதிகரிக்க 'டி.எம்.வி., 14' என்ற விதை, வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அவை விவசாயிகளின் தோட்டங்களிலேயே விதை உற்பத்தி செய்யப்பட்டு, பிற இடங்களில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விதையில், ஒரே செடியில், 60 முதல், 100 காய் பிடிக்கும்; இதில், எண்ணெய் சத்தும் அதிகம்.
இவ்வாறு, அவர் கூறினார்.