/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மையத்தடுப்புக்கு வர்ணம் பூச்சு நெடுஞ்சாலைத்துறை ஏற்பாடு
/
மையத்தடுப்புக்கு வர்ணம் பூச்சு நெடுஞ்சாலைத்துறை ஏற்பாடு
மையத்தடுப்புக்கு வர்ணம் பூச்சு நெடுஞ்சாலைத்துறை ஏற்பாடு
மையத்தடுப்புக்கு வர்ணம் பூச்சு நெடுஞ்சாலைத்துறை ஏற்பாடு
ADDED : ஏப் 17, 2025 10:05 PM

உடுமலை, ; தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், மையத்தடுப்பில் வர்ணம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உடுமலை - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், நகரப்பகுதியில், போக்குவரத்து நெரிசலை குறைக்க, மையத்தடுப்பு சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.
இந்த மையத்தடுப்பில், வெள்ளை மற்றும் கருப்பு வர்ண கோடுகள் அழிந்து, பொலிவிழந்து காணப்பட்டது. இரவு நேரங்களில், வாகன ஓட்டுநர்களும் பாதித்து வந்தனர்.
தற்போது, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில், மையத்தடுப்பில், வர்ணம் பூசும் பணிகள் நடக்கிறது.
இப்பணிகள் நிறைவு பெற்ற பிறகு, சந்திப்பு பகுதியில், ரிப்ளக்டர் விளக்குகள் பொருத்தவும் வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.