/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாகன போக்குவரத்து செறிவு குறித்து நெடுஞ்சாலைத்துறை கணக்கெடுப்பு
/
வாகன போக்குவரத்து செறிவு குறித்து நெடுஞ்சாலைத்துறை கணக்கெடுப்பு
வாகன போக்குவரத்து செறிவு குறித்து நெடுஞ்சாலைத்துறை கணக்கெடுப்பு
வாகன போக்குவரத்து செறிவு குறித்து நெடுஞ்சாலைத்துறை கணக்கெடுப்பு
ADDED : மே 15, 2025 11:42 PM

உடுமலை, ; உடுமலை, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டங்கள் சார்பில், முக்கிய ரோடுகளில், போக்குவரத்து செறிவு கணக்கெடுப்பு பணிகள் நடக்கிறது.
தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை போக்குரவத்து செறிவு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ரோடுகளில் அதிகரித்துள்ள வாகன போக்குவரத்து கணக்கிடப்பட்டு, அதற்கேற்ப, ரோடு விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
உடுமலை, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டங்கள் சார்பில், நேற்று போக்குவரத்து செறிவு கணக்கெடுப்பு நடந்தது. மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை சார்பில், குடிமங்கலம், தாந்தோணி, குமரலிங்கம், மடத்துக்குளம், பெரிசனம்பட்டி, துங்காவி, செங்கண்டிபுதுார், மலையாண்டிபட்டணம், கணியூர், பாப்பான்குளம், கூட்டுறவு சர்க்கரை ஆலை, என்.ஜி., புதுார் உள்ளிட்ட இடங்களில் கணக்கெடுப்பு பணி நடந்தது.
உடுமலை உட்கோட்டம் சார்பில், தாராபுரம் மாநில நெடுஞ்சாலை மற்றும் இதர ரோடுகளில் நேற்று கணக்கெடுப்பு நடந்தது. விரைவில், கணக்கெடுப்பு பணிகள் நிறைவு செய்யப்பட்டு, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதற்கேற்ப, ரோடுகள் விரிவாக்கம், மேம்பாடு, பாலம் கட்டுதல் உள்ளிட்டவற்றுக்கு மதிப்பீடு தயாரித்து, நிதி ஒதுக்கீடு பெறப்படும், என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.