/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அடிப்படை வசதிகளில்லாத குடியிருப்பு தவிக்கும் மலைவாழ் மக்கள்
/
அடிப்படை வசதிகளில்லாத குடியிருப்பு தவிக்கும் மலைவாழ் மக்கள்
அடிப்படை வசதிகளில்லாத குடியிருப்பு தவிக்கும் மலைவாழ் மக்கள்
அடிப்படை வசதிகளில்லாத குடியிருப்பு தவிக்கும் மலைவாழ் மக்கள்
ADDED : டிச 13, 2024 08:29 PM
உடுமலை; உடுமலை அருகே, அடிப்படை வசதிகள் இல்லாமல் மலை வாழ் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்; மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை வனச்சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் இருந்து கடந்த 1972ல், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் திருமூர்த்திமலைக்கு இடம் பெயர்ந்தனர்.
திருமூர்த்தி அணை படகுத்துறை எதிரில், அரசு சார்பில், கடந்த 1984ல், இடம் பெயர்ந்த மக்களுக்கு, 120 வீடுகள் கட்டித்தரப்பட்டன. குடியிருப்பில், பல ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல், மலைவாழ் மக்கள் தவித்து வருகின்றனர்.
அணையின் அருகிலேயே இருந்தும் போதுமான குடிநீர் வசதி இல்லை. நீண்ட காலமாக பயன்பாட்டில் இருக்கும் வீடுகளின் சுவர்கள் விரிசல் விட்டு, அச்சத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. மேற்கூரையும் சிதிலமடைந்து, மழைக்காலங்களில், மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். வனப்பகுதியின் அருகில் குடியிருப்பு அமைந்துள்ள நிலையில், போதிய தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில், வனவிலங்குகளால், அங்கு வசிப்பவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது.
பொது கழிப்பிட வசதியும் இல்லை. சரிவான பகுதியில், குடியிருப்பு உள்ளதால், மழைக்காலங்களில், குடியிருப்பை சுற்றிலும் மண் அரிப்பு ஏற்படுகிறது. தெருவிளக்குகளும் போதுமான அளவு இல்லை.
சுற்றிலும் புதர் மண்டி காணப்படுவதால், வனவிலங்குகளாலும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து தொடர் கோரிக்கைகள் விடுத்தும், போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம், வனத்துறை அல்லது தளி பேரூராட்சி வாயிலாக திருமூர்த்திமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பில், புதிதாக வீடுகள் கட்டித்தர வேண்டும். அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.