/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டிச., 25ல் வேல் வழிபாடு; ஹிந்து முன்னணி முடிவு
/
டிச., 25ல் வேல் வழிபாடு; ஹிந்து முன்னணி முடிவு
ADDED : நவ 28, 2024 06:28 AM

அவிநாசி; அவிநாசியில் உள்ள திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலய அரங்கில் ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில் வேல் வழிபாடு ஆலோசனை கூட்டம் மற்றும் கோட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
இதற்கு தலைமை தாங்கிய மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது:
வரும் டிச., 25ம் தேதி வேல் வழிபாடு நிகழ்ச்சி கொங்கணகிரி முருகன் கோவிலில் துவங்கி அலகுமலை வித்யாலயா பள்ளி வளாகத்தில் வேல் வழிபாடு மற்றும் யாகம் நடைபெறும்.
பின் அலகுமலை முருகன் கோவிலில் சிறப்பு தரிசனத்தோடு நிகழ்ச்சி நிறைவடைகிறது. 2ம் தேதி முதல் இந்த வேல் வழிபாடு பொதுமக்கள் தரிசனத்திற்காக திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள கோவில்களில் வைக்கப்பட உள்ளது.
நடிகை கஸ்துாரியை கைது செய்ய வேகம் காட்டிய தமிழக அரசு ஐயப்பன் பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் பாடல் பாடிய பாடகி இசைவாணியையும் கைது செய்ய வேண்டும்.
கோவில் யானைகளுக்கு, புத்துணர்வு முகாம் நடத்த வேண்டும். சமீபகாலமாக கோவில்களில் யானை இறப்புகள், பாகன்கள் இறப்புகள் ஆகியவை வருத்தம் அடைய செய்கிறது. இவ்வாறு, அவர் பேசினார்.
மாநில பொதுச் செயலாளர் கிஷோர்குமார், மாநிலச் செயலாளர்கள் தாமு வெங்கடேஸ்வரன், செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.