தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'தரிசனக் கட்டணம் ரத்து செய்க': ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

'தரிசனக் கட்டணம் ரத்து செய்க': ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

'தரிசனக் கட்டணம் ரத்து செய்க': ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்


UPDATED : ஜூலை 26, 2026 09:39 PM

ADDED : ஜூலை 26, 2026 09:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 26, 2026 09:39 PM ADDED : ஜூலை 26, 2026 09:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல்லடம்:பல்லடத்தில் கோவில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், அறநிலையத் துறையை கண்டித்தும் ஹிந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் செந்தில் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சர்வேஸ்வரன் வரவேற்றார்.

மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கோவை சதீஷ் பேசுகையில், ''கோவில்களின் பாரம்பரியம் மற்றும் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். கோவில் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை நிலைநிறுத்தப்பட வேண்டும்; கோவில்களில் வசூலிக்கப்படும் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். அறநிலையத் துறையில் ஊழலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்களின் நிர்வாகம் தொடர்பாக அறநிலையத் துறை அமைச்சர் ஆய்வு மேற்கொள்வதை வரவேற்கிறோம்; முறைகேடுகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்

கோவில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், அறநிலையத் துறைக்கு எதிராகவும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாவட்டச் செயலாளர் ரஞ்சித் நன்றி கூறினார்.

.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us