ADDED : ஜன 12, 2026 06:38 AM

அ நிறம் | அளவு
பல்லடம்: பல்லடத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், ஹிந்து முன்னணி இணைப்பு விழா நேற்று நடந்தது.
மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் சர்வேஸ்வரன் வரவேற்றார். மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் செந்தில், மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் ரஞ்சித், நகர பொறுப்பாளர் அங்கு ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆட்டோ டிரைவர்கள், ஹிந்து முன்னணி ஆட்டோ தொழிலாளர் சங்கத்தில் இணைந்தனர். மேலும், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் ஹிந்து முன்னணியில் தங்களை இணைத்துக் கொண்டனர். நிர்வாகிகள் விஜய் விஜயன், அங்குராஜ், சேகர், செல்லதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
