/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஹிந்து அன்னையர் முன்னணி பயிற்சி முகாம்
/
ஹிந்து அன்னையர் முன்னணி பயிற்சி முகாம்
ADDED : மார் 16, 2024 01:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி:அவிநாசி மங்கலம் ரோட்டில் உள்ள திருப்புக் கொளியூர் வாகீசர் மடாலயத்தில் உள்ள தியான அரங்கில் ஹிந்து அன்னையர் முன்னணி பயிற்சி முகாம் நடைபெற்றது.
இம்முகாமை திருப்புக் கொளியூர் வாகீசர் மடாலய ஆதீனம் காமாட்சி தாச ஸ்வாமிகள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில், உலக நன்மை, தொழில் வளம், கல்வி வளம், ஆன்மீக எழுச்சி ஆகியவற்றிற்காக அன்னையர் வேல் வழிபாடு நடைபெற்றது. மாநிலச் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் கேசவன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

