/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விநாயகர் சிலைகள் ஆற்றில் விசர்ஜனம் ஹிந்து அமைப்பினர் கொண்டாட்டம்
/
விநாயகர் சிலைகள் ஆற்றில் விசர்ஜனம் ஹிந்து அமைப்பினர் கொண்டாட்டம்
விநாயகர் சிலைகள் ஆற்றில் விசர்ஜனம் ஹிந்து அமைப்பினர் கொண்டாட்டம்
விநாயகர் சிலைகள் ஆற்றில் விசர்ஜனம் ஹிந்து அமைப்பினர் கொண்டாட்டம்
ADDED : ஆக 29, 2025 09:51 PM

- நிருபர் குழு -
உடுமலை பகுதிகளில், ஹிந்து முன்னணி சார்பில், பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நேற்று நடந்தது.
விநாயகர் சதுர்த்திவிழாவை முன்னிட்டு, ஹிந்து முன்னணி சார்பில், உடுமலை நகர பகுதியில் -60, விநாயகர் சிலைகள், குடிமங்கலம் பகுதியில் -35, மடத்துக்குளம் - 58, குமரலிங்கம் - 37, தளி - 44, அமராவதி நகர் -- 27, கணியூர் - 16 என, 271 விநாயகர் சிலைகள், கடந்த, 27ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று, சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடந்தது.
* குடிமங்கலம் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம், பெதப்பம்பட்டி நால் ரோட்டில் துவங்கியது. ஹிந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் உதயகுமார் தலைமை வகித்தார், காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரசுவாமிகள், கவிஞர் கூடல் ராகவன், பா.ஜ., நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
* உடுமலை நகரத்தில் நடந்த ஊர்வலத்துக்கு, மாவட்ட துணை தலைவர் ராஜேஸ் தலைமை வகித்தார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணன், மாநில பேச்சாளர் சிங்கை பிரபாகரன், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
* எரிசனம்பட்டியில் நடந்த ஊர்வலத்துக்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஹிந்து முன்னணி கிழக்கு மாவட்ட செயலாளர் நளினி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நேற்று மூன்று பகுதிகளிலிருந்தும், 153 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, மடத்துக்குளத்தில் அமராவதி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
ஹிந்து சாம்ராஜ்யம் உடுமலை பகுதியில், ஹிந்து சாம்ராஜ்யம் சார்பில், 18 விநாயகர் சிலைகளும், அனுமன் சேனா சார்பில், 8 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இரு அமைப்புகள் சார்பில், உடுமலையில் நேற்று விசர்ஜன ஊர்வலம் நடந்தது. ஹிந்து சாம்ராஜ்யம் மாநில தலைவர் சக்திவேல், அனுமன் சேனா மாவட்ட தலைவர் செந்தில், நிர்வாகிகள் பங்கேற்றனர். பொதுக்கூட்டம் முடிந்ததும், விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, மடத்துக்குளத்தில் அமராவதி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
கிணத்துக்கடவு கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாலமாக கொண்டாடப்பட்டது. ஹிந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பில் ஏராளமான சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இதில், ஹிந்து முன்னணி சார்பில் கிணத்துக்கடவு பகுதியில், 32 சிலைகள் மற்றும் நெகமத்தில் 25 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. சிலைகள் விசர்ஜன விழா, நேற்று கிணத்துக்கடவு கரியகாளியம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது.
விழாவில், எம்.எல்.ஏ., தாமோதரன் பங்கேற்றார். ஹிந்து முன்னணி கோவை தெற்கு மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். ஹிந்து முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று, பொள்ளாச்சி, அம்பராம்பாளையத்தில் ஆழியாறு ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
பொள்ளாச்சி பொள்ளாச்சி பகுதியில் ஹிந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில், பொள்ளாச்சியில் - 237, ஆனைமலை பகுதியில் - 206 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மூன்று நாட்கள் வழிபாட்டுக்கு பின், சிலைகள் நேற்று முன்தினம் முதல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்படுகின்றன.
நேற்று பொதுமக்கள், பல்வேறு ஹிந்து அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அம்பராம்பாளையத்தில் ஆழியாறு ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
ஆனைமலையில் ஹிந்து அமைப்புகள் சார்பில், பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள், உப்பாறு சங்கமத்தில் நேற்று விசர்ஜனம் செய்யப்பட்டன. ஊர்வலம் மற்றும் சிலைகள் விசர்ஜனம் செய்யும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.