/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம்; விசைத்தறி தொழில் துறையினர் வரவேற்பு
/
வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம்; விசைத்தறி தொழில் துறையினர் வரவேற்பு
வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம்; விசைத்தறி தொழில் துறையினர் வரவேற்பு
வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம்; விசைத்தறி தொழில் துறையினர் வரவேற்பு
ADDED : ஜன 28, 2026 06:50 AM

பல்லடம்: இந்திய- - ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கதாகும் என, விசைத்தறி ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு கவுன்சில் தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
மத்திய அரசு, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பை உருவாக்குதல், ஜவுளி ஏற்றுமதியை அங்கீகரித்து, விசைத்தறி துறையை தொடர்ந்து ஆதரித்து வருகிறது.
அவ்வகையில், இந்திய - ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, 2024- - 25ம் நிதி ஆண்டில், இந்தியாவின் விசைத்தறி ஏற்றுமதி, ஏரத்தாழ, 8.85 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், ஐரோப்பாவுக்கு, 1.76 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் எட்டியது.
தற்போது, இந்திய- - ஐரோப்பிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், விசைத்தறி பொருட்களுக்கான வரி இல்லாத சந்தையை பெறுவதற்கான மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டுகிறோம். இது, ஐரோப்பிய சந்தையில் இந்தியாவின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும். இந்த அதிரடி ஒப்பந்தமானது, இந்திய ஜவுளிகள் மீதான வரியை, 6 முதல் 20 சதவீதம் வரை குறைக்கும்.
வங்கதேசம், வியட்நாம் உள்ளிட்ட போட்டி நாடுகளை காட்டிலும், ஜவுளி உற்பத்தி தொழிலுக்கு வலுவான நன்மை அளிக்கக்கூடிய ஒப்பந்தம். இதனால், தமிழகம் உட்பட, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நிலையான கைவினைப் பொருட்களுக்கான மிகப்பெரிய வாய்ப்புகள் இதனால் உருவாகும்.
எம்.எஸ்.எம்.இ., துறைக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதம். அதிக வேலை வாய்ப்பு, தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் உலகளாவிய வளர்ச்சி உள்ளிட்டவை இதனால் உருவாகும். மொத்தத்தில் விசைத்தறி தொழில் உலகளாவிய வாய்ப்பை சந்திப்பதற்கான வாசல் திறந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

