/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஹிட் அண்ட் ரன்' சட்ட திருத்தம்: கலெக்டரிடம் டிரைவர்கள் முறையீடு
/
'ஹிட் அண்ட் ரன்' சட்ட திருத்தம்: கலெக்டரிடம் டிரைவர்கள் முறையீடு
'ஹிட் அண்ட் ரன்' சட்ட திருத்தம்: கலெக்டரிடம் டிரைவர்கள் முறையீடு
'ஹிட் அண்ட் ரன்' சட்ட திருத்தம்: கலெக்டரிடம் டிரைவர்கள் முறையீடு
ADDED : ஜன 04, 2024 12:56 AM
திருப்பூர் : 'ஹிட் அண்ட் ரன்' சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி, கலெக்டரிடம் அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர்.
சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தினர், திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் போலீஸ் கமிஷனர் பிரவின்குமார் அபினபு ஆகியோரிடம் நேற்று அளித்த மனு:
'ஹிட் அண்ட் ரன்' என்கிற விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடும் ஓட்டுனர்களுக்கு, பத்து ஆண்டு சிறை மற்றும் 7 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
விபத்து நடந்த இடத்தில் வாகனத்தை சேதப்படுத்துவது, டிரைவர்களை கடுமையாக தாக்குவது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. தங்கள் உயிரை பாதுகாத்துக்கொள்வதற்காக, டிரைவர்கள், சம்பவ இடத்திலிருந்து, பாதுகாப்பான இடத்துக்கு செல்லவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
புதிய சட்ட திருத்தத்தால், டிரைவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்ப பெறவேண்டும்; இல்லையென்றால்,வரும் 18ம் தேதி, தமிழகம் முழுவதும் அனைத்து கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு, அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.