/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஹாக்கி உலக கோப்பை அறிமுக விழா
/
ஹாக்கி உலக கோப்பை அறிமுக விழா
ADDED : நவ 18, 2025 03:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: ஜூனியர் ஆண்கள் உலக கோப்பை ஹாக்கி போட்டிகள், வரும், 28 முதல் டிச.,10 வரை, சென்னை, மதுரை ஆகிய இடங்களில் நடக்கிறது.
உலகின் தலைசிறந்த, 24 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகளை, தமிழக அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், இந்திய ஹாக்கி சம்மேளனமும் இணைந்து நடத்துகின்றன.
உலக கோப்பை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வலம் வரும் நிலையில், நாளை ( 19ம் தேதி) காலை, 8:00 மணி முதல் 9:00 மணி வரை, உடுமலை வித்யாசாகர் கல்லுாரியில், உலக கோப்பை அறிமுக விழா நடக்கிறது. இதில், பொதுமக்கள், மாணவர்கள் பங்கேற்குமாறு, ஹாக்கி யூனிட் ஆப் திருப்பூர் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

