sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மூச்சு முட்டுதே... புகை கக்கும் வாகனங்கள்; துாசு பறக்கும் சாலைகள்!

/

மூச்சு முட்டுதே... புகை கக்கும் வாகனங்கள்; துாசு பறக்கும் சாலைகள்!

மூச்சு முட்டுதே... புகை கக்கும் வாகனங்கள்; துாசு பறக்கும் சாலைகள்!

மூச்சு முட்டுதே... புகை கக்கும் வாகனங்கள்; துாசு பறக்கும் சாலைகள்!


ADDED : செப் 30, 2024 11:54 PM

Google News

ADDED : செப் 30, 2024 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூரில் பெருகி வரும் மக்கள் தொகை, அடர்த்திக்கேற்ப, அரசு, தனியார் பஸ்கள், தனியார் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, குறிப்பாக, அவிநாசி ரோடு, காங்கயம், தாராபுரம் ரோடு, பி.என்., ரோடு மற்றும் பல்லடம் ரோடு என பிரதான ரோடுகளில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்த காரணத்தினால், பெரும்பாலான சரக்கு வாகனங்கள், ேஷர் ஆட்டோக்கள் புகை கக்கிய படி தான் பயணிப்பதால், வாகனங்கள் உமிழும் கார்பன் அளவு அதிகரித்து, சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு, அந்த புகையை சுவாசிக்கும் மக்களுக்கு சுவாசக்கோளாறு, நுரையீரல் பிரச்னை ஏற்பட்டு, மருத்துவர்களை நாடும் நிலை உருவாகி, இதற்கான காரணம் தான் என்ன, மருத்துவர்கள் கேட்ட நிலையில், நகரின் பல இடங்களில் சாலை பராமரிப்பு மற்றும் புதுப்பிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால், அத்தகைய இடங்களில் அதிகளவில் துாசு பறப்பதால், அத்தகைய இடங்களில் தண்ணீர் தெளித்து, துாசு பரவுவதை தவிர்க்க, நெடுஞ்சாலை அல்லது மாநகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் சொல்லும் நிலையில்,

திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்திடம் இப்பிரச்னை குறித்து கேட்டதற்கு, ''பிரதான சாலையில் பயணிக்கும் வாகனங்களில் புகை கக்கியபடி செல்லும் வாகனங்கள் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது என்றும், அதற்கு மாறாக, வாகனத்தில் வெளியேறும் புகையின் அளவை பரிசோதித்த பின்னரே நடவடிக்கை எடுக்க முடியும் என்றும், 'எப்.சி.,' வாங்கும் முன், வாகனங்களின் புகை வெளியேற்றம் பரிசோதிக்கப்பட்டாலும் கூட, கரும்புகை வெளியேற்றும் வாகனங்களை கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும், என்று அவர் பதில் சொன்னாலும் கூட, அதுவரை மாசில்லாத காற்றை சுவாசிக்க முடியாதா என்ற கேள்வியும், ஏக்கமும் எல்லாருடைய மனதில் எழுவது நிதர்சனம்.






      Dinamalar
      Follow us