/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் ஸ்டாண்ட் அருகே நடை பாதையில் 'ஓட்டை'
/
பஸ் ஸ்டாண்ட் அருகே நடை பாதையில் 'ஓட்டை'
ADDED : ஜூலை 13, 2025 08:37 PM
உடுமலை; உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, பைபாஸ் ரோட்டில் நடைபாதை சிதிலமடைந்துள்ளதால், பயணியர் விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர்.
உடுமலை பஸ் ஸ்டாண்ட்டிற்குள், பஸ்கள் உள்ளே செல்லும் பகுதி மற்றும் வெளியேறும் பகுதியில், பைபாஸ் ரோடு அமைந்துள்ளது. இந்த ரோட்டில், பெரிய அளவிலான சாக்கடை கால்வாய் உள்ளது.
பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியே வரும் பயணியர் மற்றும் பைபாஸ் ரோட்டை பயன்படுத்தும் பொதுமக்கள் வசதிக்காக, சாக்கடை கால்வாய் மீது, நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. 'பேவர்பிளாக்' கற்கள் மற்றும் சில்வர் கம்பிகள் அமைத்து, அழகாக அமைக்கப்பட்ட நடைபாதையை முறையாக பராமரிக்காததால், சிதிலமடைந்து காணப்படுகிறது.
இந்நிலையில், பல இடங்களில் கான்கிரீட் தளம் மற்றும் நடைபாதை உடைந்து, மிகப்பெரிய ஓட்டைகள் காணப்படுகிறது. இதில் நடந்து செல்லும் பொதுமக்கள், எதிர்பாராத விதமாக, சாக்கடைக்குள் விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர். அதிலும், இரவு நேரங்களில் தடுமாறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் ஏற்பட்டுள்ளது. எனவே, நடைபாதையை உடனடியாக சரி செய்ய நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.