/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீடு தேடி மருத்துவம்; உயிர் காக்கும் சிகிச்சை!அவிநாசி மாதேஸ்வரி மருத்துவமனை அசத்தல்
/
வீடு தேடி மருத்துவம்; உயிர் காக்கும் சிகிச்சை!அவிநாசி மாதேஸ்வரி மருத்துவமனை அசத்தல்
வீடு தேடி மருத்துவம்; உயிர் காக்கும் சிகிச்சை!அவிநாசி மாதேஸ்வரி மருத்துவமனை அசத்தல்
வீடு தேடி மருத்துவம்; உயிர் காக்கும் சிகிச்சை!அவிநாசி மாதேஸ்வரி மருத்துவமனை அசத்தல்
ADDED : பிப் 15, 2025 07:08 AM

அவிநாசியின், முதல் தேசிய தரச்சான்று பெற்ற, அதிநவீன மருத்துவ சிகிச்சை முறைகளை கொண்டு செயல்படும், மாதேஸ்வரி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, வீடு தேடி சிகிச்சை வழங்கும் மருத்துவ சேவையையும் துவக்கியுள்ளது.இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரகாஷ் கூறியதாவது;நுரையீரல் மற்றும் எலும்பு மூட்டு சிகிச்சை பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, 24 மணி நேரமும் செயல்படுகிறது. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள், பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை, மகப்பேறு வார்டு, பிசியோதெரபி சிகிச்சை, முழு உடல் பரிசோதனை என, அனைத்து சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகிறது. மருத்துவமனையில் மகப்பேறு, இதய சிகிச்சை உள்ளிட்ட அனைத்து நோய்கள் சார்ந்தும் மருத்துவர்கள் உள்ளனர்.கடந்த, 15 ஆண்டாக உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவை வழங்கி வருகிறோம். அவிநாசியின் முதல் தேசிய தரச்சான்று (என்.ஏ.பி.எச்.,) பெற்ற, 50 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாக செயல்படுகிறது. அதி நவீன சி.டி., ஸ்கேன், 3டி 4டி, அல்ட்ரா சவுண்ட் மற்றும் டிஜிட்டல் எக்ஸ்ரே, கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட ஆய்வகங்கள் என, துல்லியமான முடிவுகளை காண்பிக்கும் மருத்துவ உபகரண கட்டமைப்பு உள்ளது. மிகக் குறைந்த சேவை கட்டணமே வசூலிக்கப்படுகிறது. தனியார் மருத்துவ காப்பீடு திட்டங்கள் ஏற்கப்படுகின்றன.
சலுகைகள் ஏராளம்!24 மணி நேர ஆம்புலன்ஸ் வசதி, மருந்தக வசதி மற்றும், 1,000 ரூபாய்க்கு மேல் மருந்து வாங்குவோருக்கு, இலவச 'ேஹாம் டெலிவரி' செய்யப்படும். மக்கள் பணிபுரியும் இடங்கள், வசிக்கும் வீடுகளுக்கே வந்து ரத்த மாதிரி சேகரிக்கும் சேவையும் வழங்கப்படுகிறது. 99769 38123 என்ற எண்ணுக்கு'டயல்' செய்து, தங்களின் உடல் உபாதைய சொன்னால் போதும். வீடு தேடி டாக்டர் மற்றும் மருத்துவக்குழுவினர் வீடு தேடி சென்று சிகிச்சை வழங்கி, மருந்து, மாத்திரைகளை வழங்குவர். முழு உடல் பரிசோதனை செய்து கொள்வதற்கான அனைத்து மருத்துவ கட்டமைப்புகளும் இங்குள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.