ADDED : பிப் 12, 2026 05:13 AM

திருப்பூர்: சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்தி வரும் அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள், நேற்று கண்களில் கருப்பு துணி கட்டி தங்களின் எதிர்ப்பை வெளிக்காட்டினர்.
அரசு கல்லுாரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு, யு.ஜி.சி. நிர்ணயம் செய்த, 57 ஆயிரத்து 800 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்.
ஆண்டுக்கு, 12 மாதமும் சம்பளம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற கவுரவ விரிவுரையாளர்களுக்கு, 25 லட்சம் ரூபாய் பணிக்கொடை வழங்க வேண்டும்.
அனைத்து அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்களுக்கும், பி.எப். இ.பி.எப்., பிடித்தம் செய்ய வேண்டும்.
பெண் கவுரவ விரிவுரையாளர்களின் மகப்பேறு காலத்தில், சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று, திருப்பூர், எல்.ஆர்.ஜி. கல்லுாரியில், 60க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள், கண்களில் கருப்புத்துணி கட்டி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
