தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கோவில்களில் மூத்த தம்பதியர் கவுரவிப்பு

 கோவில்களில் மூத்த தம்பதியர் கவுரவிப்பு

 கோவில்களில் மூத்த தம்பதியர் கவுரவிப்பு


ADDED : பிப் 11, 2026 09:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 09:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அவிநாசி: ஹிந்து அறநிலையத்துறையின் சார்பில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், 70 வயது பூர்த்தியான, 25 தம்பதியருக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது.

கோவில் சபா மண்டபத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, செயல் அலுவலர் சபரீஷ்குமார் தலைமை வகித்தார். அறநிலையத்துறை மாவட்ட அறங்காவலர் குழு நியமன உறுப்பினர் ஆடிட்டர் முத்துராமன், முன்னாள் அறங்காவலர் பொன்னுசாமி முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், வேட்டி, சர்ட், புடவை, மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, பழ வகைகள், எவர்சில்வர் தட்டு உட்பட பல பொருட்கள் (2,500 ரூபாய் மதிப்பு) தம்பதியர்களுக்கு வழங்கப்பட்டது.

முன்னதாக மூத்த தம்பதியர்களை வரிசையாக அமர வைத்து கோவில் சிவாச்சாரியார்கள், அவிநாசி பதிகம் பாராயணம் செய்து, கோவில் பிரசாதம் வழங்கினர். தொடர்ந்து தம்பதியர் மாலை மாற்றிக் கொண்டனர். அதேநேரம், கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள், மூத்த தம்பதியர்களிடம் ஆசி பெற்றனர்.

l பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் நேற்று நடந்த இந்நிகழ்ச்சியில், 70 வயது பூர்த்தியான, 52 தம்பதியர் பங்கேற்றனர். தம்பதிகளுக்கு கோவில் நிர்வாகம் சார்பில், பொருட்கள் மற்றும் கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.

சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, தம்பதிகளுக்கு மாலைகள் வழங்கப்பட்டு, ஒருவருக்கு ஒருவர் மாற்றி கொண்டனர். கோவில் செயல் அலுவலர் முருகன், அறங்காவலர்கள் சுந்தரமுத்து, திருமூர்த்தி, பானுமதி, ஜெகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

l திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நடந்த இந்நிகழ்ச்சியில், 22 தம்பதியர் பங்கேற்றனர். மங்கள வாத்திய இசையுடன் சென்று, விஸ்வேஸ்வரர் விசாலாட்சியம்மன், வள்ளி, தெய்வானை சமேத ஷண்முக சுப்பிரமணியர், நடராஜப்பெருமானைதரிசனம் செய்தனர்.

தம்பதியருக்கு, கனசபை முன்பாக, செயல் அலுவலர் வனராஜா முன்னிலையில், அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம் மாலை மற்றும் சால்வை அணிவித்து, சேலை, வேட்டி - சட்டை, பழவகைகள் உட்பட மங்கள பொருட்கள் அடங்கிய எவர்சில்வர் தட்டு வழங் கினார். மஹா மண்டபத்தில், அமர வைக்கப்பட்டிருந்த தம்பதியரிடம் பக்தர்கள் ஆசி பெற்றனர்.

l நல்லுார் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவில் உட்பட, மாவட்டத்தில், முக்கிய கோவில்களில், வயது முதிர்ந்த தம்பதியருக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

l திருப்பூர், காலேஜ் ரோடு கொங்கனகிரி கந்த பெருமான் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில், 20 தம்பதியர் பங்கேற்றனர். விழாவில், கோவில் செயல் அலுவலர் பவானி, அறங்காவலர்கள் ராஜாமணி, துரைசாமி, மகேஸ்வரி, ஜீவானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us