/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேளாண் கல்லுாரி மாணவர்கள் தோட்டக்கலை சார்ந்த பயிற்சி
/
வேளாண் கல்லுாரி மாணவர்கள் தோட்டக்கலை சார்ந்த பயிற்சி
வேளாண் கல்லுாரி மாணவர்கள் தோட்டக்கலை சார்ந்த பயிற்சி
வேளாண் கல்லுாரி மாணவர்கள் தோட்டக்கலை சார்ந்த பயிற்சி
ADDED : மார் 31, 2025 09:59 PM
உடுமலை ; உடுமலையில், வேளாண் பல்கலை மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ், வேளாண், தோட்டக்கலைத்துறை சார்ந்த பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
உடுமலை பகுதிகளில், கோவை வேளாண் பல்கலை மாணவர்கள், கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர்.
கிராம வரைபடம் தயாரித்தல், ஊரக வேளாண் பணி திட்டத்தின் கீழ், வேளாண் மற்றும் தோட்டக்கலை பணிகளை பார்வையிட்டும், விவசாயிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இக்குழு சார்பில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கண்காட்சி அமைக்கப்பட்டு, தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டுகளை பிடிக்கும் பொறி, பல வகை நுண்ணுாட்ட சத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு வேளாண் தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கினர்.
அதே போல், வேளாண் கல்லுாரி மாணவர்கள், உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, உடுமலை சின்னவீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், நோயின் அறிகுறிகள், பாதிப்புகள், நோய் பரவும் முறை தடுக்கும் வழிமுறைகள் குறித்து, மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.