/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வீடு கட்டும் திட்டம்; அதிகாரிகள் முயற்சி தேவை'
/
'வீடு கட்டும் திட்டம்; அதிகாரிகள் முயற்சி தேவை'
ADDED : டிச 31, 2024 04:33 AM

பொங்கலுார் : பொங்கலுார் ஊராட்சி ஒன்றிய குழுவின் நிறைவு கூட்டம் தலைவர் குமார் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் அபிராமி, பி.டி.ஓ.,க்கள் விஜயகுமார், ஜோதி முன்னிலை வகித்தனர்.
கூட்ட விவாதம்:
ஜோதிபாசு (இ.கம்யூ.,): டி.ஆண்டிபாளையம், பால்மடை பகுதியில் பல்நோக்கு மையம் அமைக்க உடனே டெண்டர் விட வேண்டும். ஆண்டிபாளையம் பகுதி நேர ரேஷன் கடையை திறக்க வேண்டும்.டி.ஆண்டிபாளையம், குமாரபாளையம் கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும். பழைய ஒன்றிய கட்டடத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் கொண்டு வர வேண்டும். வேலம்பட்டி டோல்கேட் வழியாக செல்வதற்கு தொங்குட்டிபாளையம் பகுதிக்கும் இலவச பாஸ் தர வேண்டும்.
சுப்பிரமணி (தி.மு.க.,): பண்ணை கிணறு கான்கிரீட் ரோடு போட வேண்டும். நல்லகாளிபாளையம் காங்கிரீட் ரோடு சேதம் அடைந்துள்ளது.
குமார் (தலைவர்): ஒவ்வொரு கவுன்சிலருக்கும் ஒரு கோடி ரூபாய்க்கு திட்ட பணிகளுக்கு நிதி கிடைத்துள்ளது. நோட்டீஸ் கொடுத்து டெண்டர் வைத்துக்கொள்ளலாம்.
லோகுபிரசாத் (தி.மு.க.,):மாதப்பூர் டோல்கேட்டில் இருந்து ஐந்து கிலோமீட்டர் சுற்றளவு உள்ள பகுதிக்கு இலவச பஸ் வழங்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தொட்டம்பட்டி- - காரப்பாளையம் ரோட்டில் உள்ள பாலம் தரம் உயர்த்த வேண்டும்.
குமார் (தலைவர்): பாலத்தை நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைத்து அதனை தரம் உயர்த்த சொல்லலாம். கலெக்டரிடம் மனு கொடுத்து டோல்கேட்டை கடக்க மாதத்திற்கு, 150 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்க வலியுறுத்தலாம். நம் பதவிக்காலம் முடிகிறது. கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் சிலர் வீடு கட்ட முடியாமல் உள்ளனர்.
திட்டம் வெற்றி பெற அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும். நமக்கு பிரதிநிதித்துவம் இனி இருக்காது. மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம்.