/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கடன் பிரச்னையில் வீடு அபகரிப்பு
/
கடன் பிரச்னையில் வீடு அபகரிப்பு
ADDED : ஆக 16, 2025 10:23 PM
திருப்பூர்; வெள்ளியங்காடு, ஈஸ்வரமூர்த்தி நகரை சேர்ந்தவர் சாந்தி, 52. தனது 2.75 சென்ட் வீட்டை, அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவரிடம் பத்திரத்தை அடகு வைத்து, 13 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். இதற்கிடையில், இந்த வீட்டை பழனிசாமி அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், 50 என்பவருக்கு விற்பனை செய்தார்.
இச்சூழலில், அடகு வைத்திருந்த வீட்டை வேறு ஒருவருக்கு விற்றது குறித்து சாந்தி, பழனிசாமியிடம் கேட்டார். முறையாக பதில் அளிக்கவில்லை.
தொடர்ந்து, முறைகேடாக வீட்டை வாங்கிய மணிகண்டனிடம் இதுகுறித்து கேட்டார். உடனே வீட்டை காலி செய்ய கூறினார். பின், சிலருடன் வீட்டுக்கு சென்று உள்ளே இருந்த பொருட்களை சேதப்படுத்திய மணிகண்டன், பொக்லைன் மூலம் வீட்டின் முன்பகுதியை இடித்து சேதப்படுத்தினார்.
இதுதொடர்பாக, சாந்தி அளித்த புகாரின் பேரில், திருப்பூர் தெற்கு போலீசார் பழனிசாமி, அவரது நண்பர் ராமலிங்கம் மற்றும் வீட்டை இடித்த மணிகண்டன், பொக்லைன் டிரைவர் பாண்டி உள்ளிட்டோர் மீது வழக்குபதிவு செய்தனர்.
தொடர்ந்து, மணிகண்டன், பாண்டி ஆகியோரை கைது செய்தனர்.