/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீடு தேடி ரேஷன் பொருட்கள் திட்டம்; நாளை வினியோகம் செய்ய அறிவிப்பு
/
வீடு தேடி ரேஷன் பொருட்கள் திட்டம்; நாளை வினியோகம் செய்ய அறிவிப்பு
வீடு தேடி ரேஷன் பொருட்கள் திட்டம்; நாளை வினியோகம் செய்ய அறிவிப்பு
வீடு தேடி ரேஷன் பொருட்கள் திட்டம்; நாளை வினியோகம் செய்ய அறிவிப்பு
ADDED : அக் 14, 2025 09:50 PM
உடுமலை; ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் திட்டத்தில், நாளை ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.
தமிழக அரசு சார்பில், 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம் மேற்கொள்ளப்படும் 'தாயுமானவர்' திட்டம் துவக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், கடந்த மாதம், 5ம் தேதி, ரேஷன் ஊழியர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்தனர். இந்த திட்டம் முதியவர்கள், மாற்றுத்திறனாளிக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. இது அவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், நடப்பு மாதத்தில், 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், தாயுமானவர் திட்டத்தில் ரேஷன் பொருட்கள் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நாளை (16ம் தேதி) இத்திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படும் எனவும், இதனை முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.