/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நான்கு இடம் முன்னேறியது எப்படி?
/
நான்கு இடம் முன்னேறியது எப்படி?
ADDED : மே 17, 2025 02:27 AM
திருப்பூர், : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், திருப்பூர், 94.84 சதவீத தேர்ச்சியுடன், 17வது இடம் பெற்றது.
கடந்த முறை விட, 2.46 சதவீதம் கூடுதல் தேர்ச்சி என மார்தட்டிக்கொண்டாலும், 94 சதவீதம் என்ற நிலையில், 15 முதல், 21வது இடத்தை கைப்பற்ற, ஆறு மாவட்டங்கள் இடையே பெரும் போட் டியே நிலவியுள்ளது.
திருப்பூரை (94.84 சதவீதம்) விட, 0.68 சதவீதம் குறைவாக பெற்று, 94.16 பெற்று, திருநெல்வேலி, 21வது இடம். 0.33 சதவீதம் குறைவாக பெற்று, கடலுார், 20வது இடம், 0.32 சதவீதம் குறைவாக பெற்று, நாமக்கல், 19வது இடம். 0.2 சதவீதம் குறைவாக பெற்று, கிருஷ்ணகிரி, 18வது இடம்.
திருப்பூரை விட, 0.01 சதவீதம் மட்டும் (அதாவது, 94.85 சதவீதம்) பெற்றதால் காஞ்சிபுரம், 16வது இடத்தை பெற்றது.
இதே போல், திருப்பூரை விட, 0.73 சதவீதம் கூடுதலாக பெற்றதால், தஞ்சாவூர் (95.57) 12 வது இடம், 0.43 சதவீதம் கூடுதலாக பெற்றதால், திருவாரூர் (95.27) 13 வது இடம், 0.42 சதவீதம் கூடுதலாக பெற்றதால், தென்காசி (95.26), 14 வது இடம், 0.25 சதவீதம் கூடுதலாக பெற்றதால், விழுப்புரம் (95.09), 15 வது இடம். திருப்பூரை விட, 0.01 சதவீதம் மட்டும் பெற்றதால் காஞ்சிபுரம் (94.85) 16 வது இடத்தை பெற்றது.
பத்து இடங்களுக்குள்வர முடியாதது ஏன்?
மாநில தேர்ச்சி சதவீதபடி, சிவகங்கை மாவட்டம் மட்டுமே, 98.31 சதவீதத்தை பிடித்துள்ளது. விருதுநகர், 97.45 சதவீதம். 96 ல் இருந்து 96.76 சதவீதம் வரை, ஒன்பது மாவட்டங்கள் (அதாவது, மூன்று முதல் 11 இடங்களை பெற்ற மாவட்டங்கள்) பெற்றுள்ளன. மூன்றாமிடம் பெற்ற, துாத்துக்குடி, 96.76 சதவீதம் பெற்றுள்ளது. இதை விட, 1.92 சதவீதம் குறைவாக பெற்று, திருப்பூர், 17வது இடம் பெற்றுள்ளது.
முந்தைய ஆண்டை விட, 2.46 சதவீதம் கூடுதலாக பெற்ற போதும், ஒவ்வொரு மாவட்டமும் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க (96 சதவீதத்துடன்) போட்டி போட்ட தால், திருப்பூர் மாவட்ட தால், முதல் பத்து மாவட்டங்களுக்குள் வர இயலவில்லை.