தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/புதிய நீராதாரம் எப்படி? அதிகாரிகள் கள ஆய்வு

புதிய நீராதாரம் எப்படி? அதிகாரிகள் கள ஆய்வு

புதிய நீராதாரம் எப்படி? அதிகாரிகள் கள ஆய்வு


UPDATED : நவ 25, 2026 09:52 PM

ADDED : நவ 25, 2026 09:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 09:52 PM ADDED : நவ 25, 2026 09:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காங்கயம்: அமராவதி ஆற்றின் உபரி நீரைப் பயன்படுத்தி, காங்கயம் வட்டார கிராமங்களுக்கு புதிய நீராதாரம் உருவாக்குவது தொடர்பாக, தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.

வீரணம்பாளையம், பொத்திபாளையம், பச்சாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், நீராதாரத் தேவைகள் மற்றும் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அத்திக்கடவு -– அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தைப் போன்று, அமராவதி ஆற்றின் உபரி நீரைப் பயன்படுத்தி நிரந்தர நீராதாரம் உருவாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மழை மறைவு பகுதியாக உள்ள இக்கிராமங்களில், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புக்கு நீரின்றி சிரமம் ஏற்படுவதாகவும், உபரி நீரை முறையாகத் திருப்பி பயன்படுத்தினால் நீண்டகாலத் தீர்வு கிடைக்கும் என்றும் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us