/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகர்ப்புற வாரிய அடுக்குமாடி குடியிருப்பு; பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது எப்படி?
/
நகர்ப்புற வாரிய அடுக்குமாடி குடியிருப்பு; பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது எப்படி?
நகர்ப்புற வாரிய அடுக்குமாடி குடியிருப்பு; பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது எப்படி?
நகர்ப்புற வாரிய அடுக்குமாடி குடியிருப்பு; பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது எப்படி?
ADDED : அக் 26, 2025 11:40 PM

பல்லடம்: நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது எப்படி என்பது குறித்து குடியிருப்பாளர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
பல்லடம் அருகே, சுக்கம்பாளையம் ஊராட்சி, பெரும்பாளியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 45 கோடி ரூபாய் செலவில், 8 தளங்களுடன் கூடிய, 432 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
இவற்றின் பயனாளிகள் தேர்வு செய்யும் பணி ஒருபுறம் நடந்து வர, 70 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன. குடியிருப்பினர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் முன்னிலையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு, அறிவொளி நகர் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
நிர்வாகி ராஜசேகர் கூறுகையில், 'இன்றைய விலைவாசியில் ஒரு சென்ட் இடம் வாங்கி வீடு கட்டுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.
அப்படியும் கட்ட வேண்டுமானால் குறைந்தபட்சம், 20 லட்சம் ரூபாய் வேண்டும்.
மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன், குறைந்த விலைக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு குறைந்த விலைக்கு பெற்ற வீடுகளை நாம் தான் முறையாக பராமரித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான், எந்த பிரச்னையும் இல்லாமல் அமைதியாக வாழ முடியும்.
இதற்கு, குடியிருப்போர் சங்கம் அமைத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். சங்கம் இருந்தால், சாக்கடை கால்வாய் அடைப்பு, குடிநீர் பிரச்னை, தெரு விளக்கு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். சங்கம் அமைத்து செயல்பட்டால் தான் சங்கடங்கள் தீரும்.
இதற்கு மேல் ஏதாவது பிரச்னை என்றால், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் அல்லது மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம்.
ஆரம்ப கட்டத்திலேயே இப்பணிகளை மேற்கொண்டால்தான் பின்னாளில் எந்த இடையூறும் இருக்காது' என்றார்.

