ADDED : டிச 12, 2025 06:27 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, விழுதுகள் தன்னார்வ அமைப்பு மற்றும் பார்க்ஸ் கல்லுாரி என்.எஸ்.எஸ். சார்பில், பார்க்ஸ் கல்லுாரியில் மனித உரிமைகள் தின விழிப்புணர்வு முகாம் நடந்தது.
சார்பு நீதிபதி சந்தோஷ் சிறப்புரை ஆற்றினார். திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வக்கீல் முத்துலட்சுமி, கல்லுாரி முதல்வர் நசீமா, விழுதுகள் தன்னார்வ அமைப்பு இயக்குனர் தங்கவேல், திட்ட மேலாளர்கள் சந்திரா, கோவிந்தராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவின் முதுநிலை நிர்வாக உதவியாளர் சிராஜூதீன், நிர்வாக உதவியாளர் பிரசாந்த், பார்க்ஸ் கல்லுரி துணை முதல்வர், பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
