/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முயல்களை வேட்டையாடினால் அபாரதம்; வனத்துறை எச்சரிக்கை
/
முயல்களை வேட்டையாடினால் அபாரதம்; வனத்துறை எச்சரிக்கை
முயல்களை வேட்டையாடினால் அபாரதம்; வனத்துறை எச்சரிக்கை
முயல்களை வேட்டையாடினால் அபாரதம்; வனத்துறை எச்சரிக்கை
ADDED : ஜூலை 20, 2025 10:23 PM
உடுமலை; முயல் வேட்டையில் ஈடுபடுபர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
உடுமலை, மடத்துக்குளம் வட்டாரத்தில், தரிசு நிலங்களிலும், ஓடைகளிலும் பரவலாக காணப்படும் அட்டவணைப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட வன உயிரினங்களை வேட்டையாடுவது அதிகரித்துள்ளது.
குறிப்பாக, பாதுகாக்கப்பட்ட வன உயிரினமான முயல்களை வேட்டையாடுபர்கள் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சமீபத்தில், திருப்பூர் ஊத்துக்குளி பகுதியில், முயலை வேட்டையாடியவர்கள் வனத்துறையினரால், கைது செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.
ஆடி மாத சீசனில், ஆனைமலை புலிகள் காப்பக எல்லை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முயல் வேட்டை குறித்த புகார்கள் வனத்துறைக்கு வரத்துவங்கியுள்ளது.
இதையடுத்து சிறப்பு ஆய்வு செய்து, வேட்டையாடுபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
வனத்துறையினர் கூறியதாவது: வன உயிரினங்களை வேட்டையாடுவது சட்டப்படி குற்றமாகும். இது தொடர்பாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், தீவிரமாக தற்போது கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அட்டவணைப்படுத்தப்பட்ட, பாதுகாக்கப்பட்ட வன உயிரினங்களான மயில், மான், முயல் போன்றவற்றை வேட்டையாடுவது வன உயிரின பாதுகாப்பு சட்டம், 1972ன் படி குற்றமாகும். எனவே, மக்கள், வன உயிரினங்களை வேட்டையாட முயல்வது கூடாது. மீறினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.