/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவி; கல்லால் அடித்து கொன்ற கணவர்
/
கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவி; கல்லால் அடித்து கொன்ற கணவர்
கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவி; கல்லால் அடித்து கொன்ற கணவர்
கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவி; கல்லால் அடித்து கொன்ற கணவர்
ADDED : அக் 02, 2025 07:56 AM

திருப்பூர்: மனைவியை கல்லால் தாக்கி கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், கம்பிளியாம்பட்டியை சேர்ந்தவர் அய்யப்பன், 35; இவரது மனைவி ராஜகுமாரி, 25; மூன்று குழந்தைகள் உள்ளனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம், ஐ.டி., கார்னரில் நடைபெற்றுவரும், ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமான பணியில் ராஜகுமாரியின் தந்தை ஈடுபட்டு வருகிறார்.
இவரை பார்க்க அய்யப்பனும், ராஜகுமாரியும் வந்தனர். நேற்று முன்தினம் இரவு, போதையில் இருந்த அய்யப்பனுக்கும், ராஜகுமாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அய்யப்பன், கல்லால் தாக்கியதில் ராஜகுமாரி இறந்தார். தப்பி சென்ற அய்யப்பனை, தாராபுரம் போலீசார், கரூரில் கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'கொல்லப்பட்ட ராஜகுமாரிக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் இருந்தது. இதனால், மனைவியை அய்யப்பன் கண்டித்தார். தாராபுரம் வந்தபோது, அந்த நபருடன் போனில் பேசுவதை அய்யப்பன் கவனித்தார். அப்போது ஏற்பட்ட தகராறில், கொலை நடந்துள்ளது' என்றனர்.