ADDED : பிப் 16, 2024 02:39 AM

திருப்பூர்,:திருப்பூரில் மனைவியை கொன்று கணவர் தற்கொலை செய்துகொண்டார்.
திருப்பூர் வெங்கமேடு வேலன் நகரை சேர்ந்தவர் செல்வம் 26. இவரது மனைவி தீபா 23. இருவரும் பனியன் தொழிலாளிகள். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்தனர். தம்பதிக்கு 2 வயதில் மகன் உள்ளார்.
நேற்று முன்தினம் இரவு தம்பதிக்கு இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டது. அதில் வீட்டு கதவை பூட்டி விட்டு மனைவியை கணவர் தாக்கினார். மனைவி மயக்கமடைந்து விழுந்தார். மனைவி இறந்ததாக நினைத்து கணவர் செல்வம் துாக்கு மாட்டி இறந்தார்.
அருகிலிருந்தோர் கதவை உடைத்து உள்ளே சென்று மயக்கத்தில் இருந்த தீபாவை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர் சிகிச்சைக்காக கோவையில் சிகிச்சை பெற்று வந்த தீபா நேற்று மாலை இறந்தார். அனுப்பர்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.