/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'குப்பை அள்ள மறந்தாச்சு... 24 மணி நேர குடிநீர் என்னாச்சு?'
/
'குப்பை அள்ள மறந்தாச்சு... 24 மணி நேர குடிநீர் என்னாச்சு?'
'குப்பை அள்ள மறந்தாச்சு... 24 மணி நேர குடிநீர் என்னாச்சு?'
'குப்பை அள்ள மறந்தாச்சு... 24 மணி நேர குடிநீர் என்னாச்சு?'
ADDED : டிச 07, 2024 06:54 AM

அனுப்பர்பாளையம்; ''குடிநீர் 24 மணி நேர வினியோகத் திட்டம் செயல்பட தாமதமாகிறது. குப்பைகள் அள்ளப்படாமல் வார்டுகளில் தேங்கி நிற்கின்றன'' என்று மாநகராட்சி மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டினர்.
திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலக் கூட்டம், தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது. உதவி கமிஷனர் முருகேசன் முன்னிலை வகித்தார்.
எதிரொலித்த பிரச்னைகள்
கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் பெரும்பாலானோர், ''குப்பைகள் சேகரிக்கப்படாமல் தேங்கியுள்ளது; ஆட்கள், வாகனங்கள் பற்றாக்குறை உள்ளது. பொதுமக்கள் கேட்டால் பதில் சொல்ல முடிவதில்லை'' என்று ஆதங்கப்பட்டனர். ''குப்பை சேகரிப்பதைக் கண்காணிக்க கண்காணிப்பாளர் நியமித்தால், ஒப்பந்ததாரர் அவர்களுக்கு சம்பளம் வழங்குவதில்லை என்ற புகார் வருகிறது. ஒப்பந்த நிறுவனம் உரிய பதில் கூற வேண்டும்'' என்று தலைவர் கோவிந்தராஜ் கூறினார். இதேபோல், 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் மேற்கொள்ளும் பணி எப்போது துவங்கும் என்று கவுன்சிலர்கள் பலரும் கேள்வி எழுப்பினர்.
குற்றச்சம்பவங்கள்
கவுன்சிலர்கள் பேசியதாவது:
லோகநாயகி (தி.மு.க.,): தெருவிளக்கு இல்லாத இடங்களில் குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன. தெருவிளக்கு அமைக்க வேண்டும்.
கவிதா (அ.தி.மு.க.,): பால்வாடியில் சுற்றுச்சுவர் இல்லை. குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
குமார் (ம.தி.மு.க.,): குழாய் பதிக்க ரோடு தோண்டப்பட்டு ரோடு முழுவதும் மோசமான நிலையில் உள்ளது.
ராஜேந்திரன் (இ.கம்யூ.,): பணியை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிப்பதில்லை. அனைத்தும் அரைகுறை பணியாக உள்ளது.
செழியன் (த.மா.கா.,): தெருவிளக்கு சரியாக எரிவதில்லை.
புஷ்பலதா (அ.தி.மு.க.,): குழாய் பதிக்க தோண்டப்பட்ட ரோடு சமன்கூட செய்து தர அதிகாரிகள் மறுக்கின்றனர். தொடர் விபத்தால் கை, கால் உடைகிறது. காமராஜ் நகர் முதல் வீதியில் குடிநீர் குழாய் கசிவால் ரோடு முழுவதும் பாதிக்கப்படுகிறது. கசிவை சரி செய்ய வேண்டும்.
போராடத் திட்டம்
இந்திராணி (அ.தி.மு.க.,): புதிய தெருவிளக்கு பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. விரைவில் பயன்பாட்டுக்கு வரவில்லை என்றால் மண்டல அலுவலகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன். எரியாத தெரு விளக்கு காலையில் சரி செய்யப்பட்டு எரிகிறது. ஆனால் இரவில் எரிவதில்லை. பணியில் தரம் இல்லை.
இவ்வாறு, கவுன்சிலர்கள் பேசினர்.