/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏழு ஆடு பறிகொடுத்தேன் எல்லாமே வீணாகி போச்சு
/
ஏழு ஆடு பறிகொடுத்தேன் எல்லாமே வீணாகி போச்சு
ADDED : அக் 05, 2024 03:52 AM

டீ விற்ற காசில் பிழைப்புக்காக ஆடு வாங்கி வளர்த்து வந்தேன். இரண்டு மாதம் தான்; நன்றாக வளர்ந்து இருக்கும். ஒரு நாள் ராத்திரியில நாய் கடிச்சிருச்சு. ஆடுகளை இழந்ததால், நிம்மதியே இல்லை.
கஷ்டப்பட்டது எல்லாம் வீணா போச்சு. இதுவரை ஏழு ஆடுகளை பறிகொடுத்து விட்டேன். மகளின் திருமணத்துக்கு நகை வாங்க, ஆட்டை வளர்த்து அதில் கிடைக்கும் வருவாயை தான் நம்பி இருந்தேன். ஆனா, கிடைக்கல. நாய் கடிச்சதுனால, ஆட்டை தண்ணீல துாக்கி போட வேண்டியதாச்சு.
ஏழை குடும்பம்; எல்லாம் வீணாகி போச்சு. இதுவரை, 70 ஆயிரம் ரூபாய் இழந்துட்டேன். இந்த பகுதியை விட்டு காலி செய்து சென்று விடலாம் என முடிவு செய்து விட்டேன்.
அலமேலு, கோவில்வழி, திருப்பூர்