ADDED : டிச 03, 2024 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்காளியம்மன் கோவில் மார்கழி உற்சவ குழு சார்பில் அண்ணாதுரை, திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜிடம் நேற்று அளித்த மனு:
பல்லடத்தில் அமைந்துள்ள நுாற்றாண்டு பழமையான பொங்காளியம்மன் கோவிலில், கடந்த ஓராண்டாக திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. வரும் 5 ம் தேதி, கும்பாபிஷகம் நடைபெற உள்ளது. பல்லடம் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஆன்மிக பெரியோர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே, கும்பாபிஷேக நாளன்று, பல்லடம் வட்டார பகுதிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும்.