'அவிநாசி தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்வேன்!'
'அவிநாசி தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்வேன்!'
ADDED : ஏப் 15, 2026 05:44 AM

அவிநாசி: அவிநாசி தொகுதியில் மக்களுடன் உரையாடிய வேட்பாளர் முருகன், அவர்களுடன் உணவருந்தினார்.
அவிநாசி தொகுதியில் மத்திய இணை அமைச்சரும், பா.ஜ. வேட்பாளருமான முருகன் தீவிரமாக ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மக்கள் வரவேற்பு அளித்து, தங்களது குறைகளை தெரியப்படுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, நேற்று அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி, ஆயிக்கவுண்டம்பாளையம் ஏ.டி. நகரில் வசிக்கும் மக்களை சந்தித்து வேட்பாளர் முருகன் ஓட்டு சேகரித்தார்.
அப்பகுதி மக்களுடன் நீண்ட நேரம் கலந்துரையாடினார். தொடர்ந்து, அவர்களுடன் உணவருந்திய வேட்பாளர், மக்களின் தேவைகளான கல்வி மற்றும் சுகாதாரம் குறித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
அப்போது, மக்களிடம் பேசிய வேட்பாளர் முருகன், ''தமிழகத்தை ஆட்சி செய்து வரும் தி.மு.க. மக்களின் உழைப்பை சுரண்டுவது, மக்கள் விரோத ஆட்சியை நடத்தி கொண்டுள்ளது.
எனவே, தமிழகத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமைந்தால் தமிழகத்துக்கும், அவிநாசி தொகுதிக்கும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வேன். அதற்கான அங்கீகாரத்தை மக்களாகியநீங்கள் தான் தர வேண்டும்,'' என்றார்.
மத்திய இணையமைச்சர் முருகனின் இந்த எளிமையான செயல் கண்டு, அப்பகுதி மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் அவரை உபசரித்து மகிழ்ந்து, அவருக்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தனர்.
