ADDED : ஜன 12, 2025 11:37 PM

திருப்பூரில் இருந்து பெரும்பாலும் கேரளாவுக்கு அதிகளவில் மாடுகள் வாங்கிச் செல்லப்படுகிறது. உள்ளூர் வியாபாரிகளை விட, வெளிமாநில வியாபாரிகளை நம்பியே அமராவதிபாளையம் மாட்டுச்சந்தை நடக்கிறது. கடந்த, 2024ம் ஆண்டில் மாடு வரத்து, 750 முதல் 850 வரை இருந்த போதும், மாடுகள் விற்பனையாகாமல் போகிறது என்ற நிலை இல்லை.
அதிகபட்சமாக 50 மாடுகள் மட்டுமே சந்தைக்கு வந்து விற்பனையாகாமல் திரும்ப அழைத்து செல்லப்படுகிறது. மற்ற வகையில் சந்தைக்கு வரும், 95 சதவீத மாடுகளும் விற்பனையாகி விடுகிறது. வாரம், 1.30 - 1.50 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. மாடுகளை போல் எருது, கன்றுகுட்டி விற்பனையும் சிறப்பாகவே உள்ளது.
ஒரு புறம் விளைச்சல் நிலங்கள், விவசாயம் குறைந்து வருவதாக மனக்குமுறல்களை முன்வைத்தாலும், எதற்கும் தோட்டத்தில் ஒரு மாடு இருக்கட்டும் என கன்றுக்குட்டிகளை, 5,000 ரூபாய் விலையில் வாங்கிச் செல்லும் விவசாயிகள் பலர். பதிவாகிய மழை, தொடரும் பனிப்பொழிவால் பசும்புல் வளர்ச்சி அதிகரித்து வருவது கால்நடை வளர்ப்பு பெருகுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.