/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழில் நகரங்களை இணைக்கும் 'மெமு' ரயில்கள் இயக்க யோசனை
/
தொழில் நகரங்களை இணைக்கும் 'மெமு' ரயில்கள் இயக்க யோசனை
தொழில் நகரங்களை இணைக்கும் 'மெமு' ரயில்கள் இயக்க யோசனை
தொழில் நகரங்களை இணைக்கும் 'மெமு' ரயில்கள் இயக்க யோசனை
ADDED : அக் 23, 2025 11:01 PM
- நமது நிருபர் -
முக்கிய தொழில் நகரங்களுடன் திருப்பூரை இணைக்கும் வகையில், 'மெமு' ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் ரைசிங் உரிமையாளர்கள் சங்க தலைவர் ராமசாமி கூறியதாவது: எதிர்கால வளர்ச்சிக்காக, திருப்பூருக்கு பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகின்றன. சரக்குகளை, துறைமுகங்களுக்கு கொண்டு செல்லவும், வெளிமாநிலங்கள் எடுத்துச்செல்லவும் விரிவான ரோடு வசதி வேண்டும்.
திருப்பூருக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான வர்த்தகர்கள், பொதுமக்கள், தொழில் முனைவோர் வந்து செல்கின்றனர். ரயில்கள் வாயிலாக மட்டும், ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். பெண்கள், முதியவர்கள், நெரிசலால் பாதிக்கப்படுகின்றனர். சேலம், ஈரோடு, தாராபுரம், பொள்ளாச்சி, உடுமலை, கோவை, மேட்டுப்பாளையம், அவிநாசி பகுதிகளுடன், திருப்பூரை இணைக்கும் வகையில், புதிய 'மெமு' வசதி தேவை. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், தொழிலாளர் என, பல்லாயிரக்கணக்கான மக்கள் மெமு ரயில் திட்டத்தால் பயன்பெறுவர்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

