
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், : திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரியின் வணிகவியல் துறை சார்பில், திட்ட வடிவமைப்பு குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.
கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். வணிகவியல் துறை தலைவர் கலையரசி வரவேற்றார். ஸ்ரீவெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லுாரி துணைமுதல்வர் நஞ்சப்பா, திட்ட அறிக்கைகள் தயாரிப்பது; புள்ளியியல் கருவிகளை நேர்த்தியாக பயன்படுத்துவது மற்றும் மனிதவள மேம்பாடு குறித்து செயல்விளக்கத்துடன் பயிற்சி அளித்தார். வணிகவியல் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் பங்கேற்றனர்.

