/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளிக்கு அடையாள அட்டை
/
மாற்றுத்திறனாளிக்கு அடையாள அட்டை
ADDED : ஏப் 06, 2025 09:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
- நமது நிருபர்-
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ பரிசோதனை முகாம், திருப்பூரில் நடைபெற்றது.
முகாமில், மருத்துவர்களின் பரிந்துரை அடிப்படையில், மாற்றுத்திறனாளிகளின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
புதிதாக 22 பேருக்கும்; 14 பேருக்கு புதுப்பித்தும் என, மொத்தம் 36 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம்குமார், அடையாள அட்டைகளை வழங்கினார்.