/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அடையாள அட்டை வழங்கும் முகாம்; மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவிப்பு
/
அடையாள அட்டை வழங்கும் முகாம்; மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவிப்பு
அடையாள அட்டை வழங்கும் முகாம்; மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவிப்பு
அடையாள அட்டை வழங்கும் முகாம்; மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவிப்பு
ADDED : அக் 08, 2025 11:10 PM
உடுமலை; மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம், இட மாற்றம் செய்யப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும், என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்து வந்தது. இனிமேல், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் இம்முகாம் நடக்கும்.
ஒவ்வொரு புதன் கிழமைகளில், கை, கால் இயக்க குறைபாடு, தொழுநோயால் பாதிப்பு, மூளை முடக்க வாதம் குள்ளத்தன்மை, தசை சிதைவு நோய், அமில பாதிப்புக்குள்ளாவனர், பார்வைத்திறன்குறைபாடுடையோர், செவித்திறன் பாதிக்கப்பட்டோர்.
இரத்த செல் குறைபாடுகள் ஆகிய மாற்றுத்திறன்களுக்கு முகாம் நடக்கும்.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில், அறிவுசார் குறைபாடு, மனநிலை பாதிக்கப்பட்டோர், புறஉலக சிந்தனையற்றோர், நரம்பியல் குறைபாடு, பல்வகை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன்களுக்கும், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையிலுள்ள, அறை எண், 96ல், காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச்சான்றுடன் கூடிய தனித்துவம் வாய்ந்த மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெறும், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.