/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழையால் பாதிப்பா... 1077-ஐ அழைக்கலாம்
/
மழையால் பாதிப்பா... 1077-ஐ அழைக்கலாம்
ADDED : அக் 14, 2024 11:57 PM
திருப்பூர் : திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், தீயணைப்பு துறை சார்பில் நேற்று விழிப்புணர்வு ஒத்திகை நடத்தப்பட்டது.
கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசியதாவது:
தமிழக அரசு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. பொதுமக்கள், வானிலை முன்னறிவிப்பு குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள, TN -Alert என்கிற அரசின் அதிகாரப்பூர்வ செயலியை மொபைல்போனில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இந்த செயலியில், வெப்பநிலை, மழை, வானிலை முன்னறிவிப்புகள் தமிழில் தெரிவிக்கப்படும்.
வடகிழக்கு பருவமழை பாதிப்பு குறித்த உதவிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையத்தை, 1077 என்கிற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

