/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலை விதிகளை கடைப்பிடித்தால் விதியை வென்று விடலாம்!
/
சாலை விதிகளை கடைப்பிடித்தால் விதியை வென்று விடலாம்!
சாலை விதிகளை கடைப்பிடித்தால் விதியை வென்று விடலாம்!
சாலை விதிகளை கடைப்பிடித்தால் விதியை வென்று விடலாம்!
ADDED : நவ 10, 2024 04:25 AM
''மாணவ, மாணவியருக்க சாலைவிதிகளை மதித்து முறையாக கடைப்பிடிக்கவும், வாகனங்களை பாதுகாப்பாக இயக்கவும் இப்போதே கற்றுக்கொடுத்து விட்டால், வரும் காலத்தில் விபத்து இல்லாமல், அவர்கள் பயணிப்பர்,'' என்கிறார், போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் சுப்பராமன்.
திருப்பூர், நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியரை தேர்வு செய்து, அவர்களுக்கு வாரத்தின் இருநாட்கள் சாலைவிதி குறித்து விழிப்புணர்வு பயிற்சி, போக்குவரத்து போலீசாரால் வழங்கப்பட்டு வருகிறது.
இதில், 'சாலையின் எந்த பக்கம் பயணிக்க வேண்டும். எதிரே வேகமாக வாகனம் வந்தால், என்ன செய்ய வேண்டும். சாதுரியமாக வாகனம் இயக்குவது எப்படி, சாலையில் சமயோஜிதமாக தவறு செய்யாமல் வாகனம் இயக்குவது, சாலை பாதுகாப்பு விதிமுறை நமக்கு என்ன சொல்லிதருகிறது, நாம் உடல்நிலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்னென்ன செய்ய வேண்டும், உடற்பயிற்சி, விளையாட்டின் அவசியம் உள்ளிட்டவை குறித்து, அறிவுரை வழங்கப்படுகிறது.
இது குறித்து, உதவி கமிஷனர் சுப்பராமன் என்ன சொல்கிறார்...
ஒவ்வொரு பள்ளியிலும் ஆர்வமுள்ள மாணவ, மாணவியரை தேர்ந்தெடுத்து ஒரு சாலை பாதுகாப்பு குழு உருவாக்குகிறோம். இக்குழுவினர் பள்ளிக்குள் வரும் வாகனங்கள், பள்ளி நுழைவு வாயில் முன் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, போலீசாருடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவர்.
ஸ்டேஷனுக்கு ஒரு பள்ளி வீதம், எட்டு ஸ்டேஷன்களுக்கு எட்டு பள்ளிகள் ஒதுக்கப்பட்டது. தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர்களிடம் பேசி குழு உருவாக்கப்படுகிறது. போக்குவரத்து போலீசார் வாயிலாக, அடிப்படை போக்குவரத்து விதிகள் கற்பிக்கப்படுகிறது. இவர்கள் சக மாணவ, மாணவியருக்கும் கற்றுத்தருவர்.
தங்கள் பள்ளிக்கு வரும் போது பிறருக்கு இடையூறு இல்லாமல் வாகனத்தை இயக்கி வர வேண்டும் என ஒவ்வொரு பெற்றோரும் உணர, இக்குழுவினர் வழிகாட்டுதல் பெரிதும் உதவிகரமாக இருக்கும். இதுதான் சாலை விதி என எடுத்துக்கூறி, அதனை மதிக்கவும், வாகனங்களை பாதுகாப்பாக இயக்கவும் இப்போதே கற்றுக்கொடுத்து விட்டால், வரும் காலத்தில் விபத்து இல்லாமல், அவர்கள் பயணிப்பர் என்பதற்காக தான்.
என்று சாலை பயணத்தில், பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது குறித்து விளக்கம் அளித்தார்.