/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
களத்துக்கு வரவே தயங்கினால் சாதிக்க முடியாது
/
களத்துக்கு வரவே தயங்கினால் சாதிக்க முடியாது
ADDED : ஜன 20, 2026 07:46 AM

திருப்பூர்: 'வெற்றியை நோக்கி, வேகமாக ஓடுபவனே வெற்றி பெறுகிறான். களத்துக்கு வரவே தயங்கினால், சாதிக்க முடியாது. காயம்பட்டாலும் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்ற வைராக்கியம் வேண்டும்,' என, மாணவியருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
திருப்பூர், எல்.ஆர்.ஜி. மகளிர் கல்லுாரி, வரலாற்றுத்துறை சார்பில், பேரவை துவக்க விழா நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) தமிழ்மலர் தலைமை வகித்தார். வரலாற்றுத் துறை துறைத்தலைவர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
கோவை, டாக்டர் என்.ஜி.பி. கல்லுாரி தமிழ்த்துறை பேராசிரியர் ரேணுகாதேவி பேசியதாவது:
போட்டி நிறைந்த உலகமிது. பட்டப்படிப்பு மட்டும் அனைத்தையும் கற்றுத்தராது; அதனை தாண்டிய கூடுதல் தகுதி வேண்டும். கல்வி தராத ஒழுக்கத்தை வேறு எதுவும் தராது.
வாழ்வில், முன்னேற கல்வியில் சிறப்பான பங்களிப்பை செலுத்துங்கள். தடைகளை தாண்டி நிலைத்து நின்று, இலக்கை அடைபவரே வெற்றியாளர்களாக ஜொலிக்கின்றனர். உன் வளர்ச்சியை பார்க்க பெற்றோர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
திறமையை வளர்த்து, நீ ஜெயித்து காட்டும் போது தான் உலகம் உன்னை திரும்பி பார்க்கும். பாடம் கற்பிக்கும் குருவுக்கு நீங்கள் செலுத்தும் நன்றிக்கடன் வெற்றி பெறுவதே.
வாழ்க்கையை சாதார ணமாக கடந்து செல்ல நினைக்க கூடாது. வெற்றியை நோக்கி, வேகமாக ஓடுபவனே வெற்றி பெறுகிறேன். களத்துக்கு வரவே தயங்கினால், நம்மால் சாதிக்க முடியாது. காயம்பட்டாலும் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்ற வைராக்கியம் வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் கருப்பையா, ஜெயசித்ரா, மகேஸ்வரி, வாசுகி, புனிதவதி, கிருஷ்ணப்பிரியா, காளீஸ்வரி, கற்பகம், லதா ஆகியோர் செய்திருந்தனர்.

