sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இங்க சொன்னா அங்கே... அங்க சொன்னா இங்கே!

/

இங்க சொன்னா அங்கே... அங்க சொன்னா இங்கே!

இங்க சொன்னா அங்கே... அங்க சொன்னா இங்கே!

இங்க சொன்னா அங்கே... அங்க சொன்னா இங்கே!


ADDED : ஜன 29, 2025 03:48 AM

Google News

ADDED : ஜன 29, 2025 03:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; மாநகராட்சி பகுதியில், அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதில் ஏற்படும் குறைபாடுகள் குறித்து ஒப்பந்த நிறுவனங்கள் கண்டுகொள்வதில்லை. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மண்டல குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

திருப்பூர் மாநகராட்சி, 4வது மண்டல குழு கூட்டம் தலைவர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. உதவி கமிஷனர் வினோத், துணை மேயர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர். நான்காவது மண்டல வார்டு கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், ஒப்பந்த நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.

இதில் கவுன்சிலர்கள் விவாதம் வருமாறு:

* சாந்தாமணி (ம.தி.மு.க.,): குப்பை அகற்றும் பணியில் பெரும் சுணக்கம் உள்ளது. ஆள் இருந்தால் ஆட்டோ இல்லை; ஆட்டோ இருந்தால் ஆள் இல்லை; இரண்டும் இருந்தால் உரிய உபகரணங்கள் இல்லை. மேல்நிலைத் தொட்டிகள் சில இடிந்து விழும் நிலையில் உள்ளன. சாலைகள் பல இடங்களில் சேதமடைந்து கிடக்கிறது. மூன்று ஆண்டுகளில் முழுமையாக எந்தப் பணியும் செய்யப்படவில்லை. இன்னும் இரண்டாண்டுகளில் எதை செய்வது? என் வார்டில் ஒரு கட்டடத்துக்கு, 1.25 லட்சம் ரூபாய். அதே அளவுள்ள மற்றொரு கட்டடத்துக்கு, 15 ஆயிரம் ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளது. ஏன் இந்த முரண்பாடு.

* மணிமேகலை (மா.கம்யூ.,): குப்பாண்டாம்பாளையத்தில் ஆழ்குழாய் கிணற்றில் சாயக்கழிவு வருகிறது என சொல்லி வேறு இடத்தில் போர்வெல் போட கேட்டு, பல மாதங்களாக பணி நடக்கவில்லை. நொச்சிபாளையம் பிரிவில் மழை நீர் வடிகால் இல்லாததால் பெரும் சிரமம் நிலவுகிறது. அதிகாரிகள் யாரும் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. தனிப்பட்ட முறையில் அங்கு மழை நாளில் நீர்தேங்காத வகையில் பணி செய்துள்ளேன். வார்டு பிரச்னையை மாநகராட்சியில் பேசினால், மண்டலத்தில் பேசுங்கள் என்கின்றனர்; இங்கு பேசினால் அங்கு பேசுங்கள் என்று சொன்னால் மக்கள் பிரச்னையை எங்குதான் பேசுவது. பத்தடி அகலமுள்ள பாதையில் வடிகால் கட்ட குழி தோண்டி ஆறு மாதமாக பணி செய்யாமல் கிடக்கிறது. தெரு விளக்கு எங்கு பொருத்தியுள்ளனர் என எந்த விவரமும் இல்லை.

* சேகர் (அ.தி.மு.க.,): பாதாள சாக்கடை மேன் ேஹால் முறையாக அமைக்கவில்லை. அடைப்பு ஏற்பட்டால் கண்டு பிடிக்க முடியாமல் பல இடங்களில் தோண்டி ரோடை சேதப்படுத்துகின்றனர். போர்வெல் பராமரிப்புக்கு ஒரு மோட்டாருக்கு, 2 ஆயிரம் என 25 மோட்டாருக்கு,50 ஆயிரம் ரூபாய் வாங்குகின்றனர். மாதம் நான்கு நாள் மட்டுமே தண்ணீர் திறந்து விடுவதோடு சரி. உடைப்பு ஏற்பட்ட போது, 400 ரூபாய்க்கு பைப் கூட வாங்கிப் போடாமல், நான் வாங்கிக் கொடுத்தேன். திட்டமிட்டு பணிகள் செய்யாமல், ரோடு முழுவதும் குழிகளாக தோண்டி மூடி சமாதிகள் போல் காட்சியளிக்கிறது.

* சின்னசாமி (அ.தி.மு.க.,): பாதாள சாக்கடை இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பு என 100க்கும் மேற்பட்ட இடங்களில் என் வார்டில் மட்டும் குழி தோண்டி, புதிதாக போட்ட ரோட்டை சேதப்படுத்தியுள்ளனர். இதனை கணக்கெடுத்து ரோடு பேட்ச் ஒர்க் பணிகளுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் தொகையை பிடித்தம் செய்ய வேண்டும்.

* கவிதா (தி.மு.க.,): வீரபாண்டி சமுதாயக் கூடம் உரிய பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும். பள்ளி கட்டடம், சமையல் கூடங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. மராமத்துபணி செய்ய வேண்டும். குறுகிய பாதைகளில் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும். குழாய் இணைப்புக்கு தோண்டிய குழிகள் மூடப்பட வேண்டும்.

பத்மநாபன் (மண்டல தலைவர்): சொத்து வரி உயர்வு குறித்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு ஏற்படும். தெரு விளக்குகள் அமைக்க மின் வாரியத்துக்கு உரிய கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. பணிகள் மேற்கொள்ளாமல் உள்ள இடங்கள் குறித்து ஆய்வு செய்து பணி விரைவுபடுத்தப்படும். ரோடு சேதம், இணைப்புகள் தருவதில் தாமதம் போன்றவற்றில் ஒப்பந்த நிறுவனங்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

வீடு கட்டும் ஆசையே

மக்களுக்கு போய் விட்டதுசொத்துவரி உயர்வு குறித்து உரிய தகவல் தர வேண்டும். தண்ணீர் லாரி நடவடிக்கை முறையாக கண்காணிக்க வேண்டும்.திடக்கழிவு மேலாண்மை குறித்து பேசிக் கொண்டு தான் இருக்கிறோம். இன்னும் பாறைக்குழியை தேடும் நிலை தான் உள்ளது. பொதுமக்கள், பசுமை தீர்ப்பாயம் என எதிர்ப்புகள் உள்ளது. நுண்ணுர உற்பத்தி மையங்கள் பாதிக்கு மேல் செயல்படாமல் உள்ளது.பயோ காஸ், மின்சார உற்பத்தி போன்ற மாற்று ஏற்பாடுகள் விரைந்து முழுமையாக மேற்கொண்டால் மட்டுமே சமாளிக்க முடியும்.வ ார்டுவாரியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி, கவுன்சிலர்கள் பொறுப்பேற்று குப்பை பிரித்து வழங்குதல், பாலிதீன் ஒழித்தல் போன்றவை மேற்கொள்ள வேண்டும். ஆட்கள், வாகனங்கள், உபகரணங்கள் பற்றாக்குறை உள்ளது.இலக்கை எட்ட கடைகள், மார்க்கெட்களில் மொத்தமாக குப்பைகளை பெற்றுக் கொள்கின்றனர். வீடுகளில் சேகரிப்பதில்லை. தீபம் பாலம் பகுதியில் தெரு விளக்கு பொருத்த வேண்டும். கே.வி.ஆர்., நகர் பகுதிக்கு புதிய சாலை விரைவில் வேண்டும். ஆண்டிபாளையம் குளத்தில் படகு போக்குவரத்து கட்டணத்தை குறைக்க சுற்றுலா வளர்ச்சி கழகத்தை வலியுறுத்த வேண்டும். புதிய கட்டட பிளான்களுக்கு பாதாள சாக்கடை திட்டமே இல்லாத பகுதியில் கூட டிபாசிட் வாங்குவது ஏற்க முடியாது. அப்ரூவல் கட்டணம் ஆறு மடங்கு அதிகரித்து விட்டது. வீடு கட்டும் ஆசையே மக்கள் மனதில் மறைந்து விட்டது.- அன்பகம் திருப்பதி (அ.தி.மு.க.,)திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர்








      Dinamalar
      Follow us