/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓட்டு எல்லாம் காசுக்கு விக்க பாக்குற... ஓசோனில் ஓட்ட போட்டு அழிவ தேடுற!
/
ஓட்டு எல்லாம் காசுக்கு விக்க பாக்குற... ஓசோனில் ஓட்ட போட்டு அழிவ தேடுற!
ஓட்டு எல்லாம் காசுக்கு விக்க பாக்குற... ஓசோனில் ஓட்ட போட்டு அழிவ தேடுற!
ஓட்டு எல்லாம் காசுக்கு விக்க பாக்குற... ஓசோனில் ஓட்ட போட்டு அழிவ தேடுற!
ADDED : செப் 22, 2024 05:33 AM

மேனியெங்கும் பச்சை குத்திய பூங்காவை பாருஅந்த பசுமையெல்லாம் மாற போகுது யோசிச்சு பாரு.நல்லா யோசிச்சு பாரு.
என்ற பாடல் வரிகள், பஸ் ஸ்டாண்டின் இரைச்சலுக்கும் மத்தியில் கேட்டது. பாடலுக்கேற்றவாறு, சிலர் நடனமாடி கொண்டிருந்தனர். வெயில் கொளுத்தினாலும், அதனைப்பற்றி கவலைப்படாமல், இளைஞர்களும், இளைஞிகளும் நடனமாடியதை பொதுமக்களுக்கு ரசித்தனர்.
உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு, கடந்த வாரம், திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில், சிக்கண்ணா கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு - 2 மாணவர்கள் விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி நடத்தினர்.
'குப்பைகளை எரிக்க கூடாது. எரித்தால், அதிலிருந்து வெளியேறும் 'கார்பன் மோனாக்ஸைடு' வானத்துக்கு சென்று, தங்கி விடுகிறது. அந்த வாயுவால், ஓசோன் படலம் பாதித்து, பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. சூரியனில் இருந்து வரும் அதிக வெப்பம் பூமிக்கு வருவதை தடுப்பதே ஓசோன் படலம் தான்; நாம் ஓசோன் படலத்தையே சேதமாக்கினால், வெப்பம் நேரடியா பூமிக்கு வரும். பூச்சி, விலங்கினால் வாழ முடியாத நிலை ஏற்படும்; உணவு சங்கிலி அறுபடும்; மனிதன் வாழ்வதே கேள்விக்குறியாகும்.
எனவே, நாம் ஒவ்வொரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்; தவறை உணர்ந்து திருத்திக் கொள்ள வேண்டும், என பாடல்கள் மூலம் எளிதாக விளக்கினர். இதற்காக, மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி நடந்தது.
ஓட்டு எல்லாம் காசுக்கு விக்க பாக்குறநீயும் ஓசோனில் ஓட்ட போட்டு அழிவை தேடுறஏ.சி., அறையில் குளிரில் நீயும் உறங்கி பழகுறஆனா, வர போகும் கேட்டை மட்டும் உணர மறுக்கிற...
என பாடலின் கடைசி பல்லவி வரிகள் சொல்லும் பொருள், பொதுமக்களுக்கு எளிதாக புரியும் வகையில் இருந்தது. இருப்பினும், அதனை மக்கள் கடைப்பிடிக்கிறார்களோ இல்லையோ, பல இடங்களில், துாய்மை பணியாளர்களே குப்பையை எரிப்பதை கைவிட வேண்டும், என சொல்லாமல் சொல்லிய பாடல் வரிகள் அரசு அதிகாரிகளிடம் செவிகளுக்கு எட்டினால் சரி தான். மாற்றம் ஒவ்வொருவரிடம் இருந்தும் வரவேண்டும்.