தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/விதிமீறல் கட்டடங்களுக்கு கடிவாளம் தேவை! : உள்கட்டமைப்பு கேள்விக்குறி

விதிமீறல் கட்டடங்களுக்கு கடிவாளம் தேவை! : உள்கட்டமைப்பு கேள்விக்குறி

விதிமீறல் கட்டடங்களுக்கு கடிவாளம் தேவை! : உள்கட்டமைப்பு கேள்விக்குறி


UPDATED : ஜூன் 20, 2026 12:33 PM

ADDED : ஜூன் 20, 2026 03:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 20, 2026 12:33 PM ADDED : ஜூன் 20, 2026 03:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: விதிமீறல் கட்டடங் களை வரன்முறை செய்யும் விவகாரம், இப்போது தமிழகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே அதிகம் விவாதிக்கப்பட்டு வந்த இந்தச் சிக்கல், இப்போது தொழில் நகரமான திருப்பூரிலும் எதிரொலிக்கத் துவங்கியிருக்கிறது.

திருப்பூரின் பிரதான சாலைகள் மற்றும் அவிநாசி, பல்லடம், திருமுருகன்பூண்டி, காங்கயம், தாராபுரம் நகரங்களில் உள்ள சாலைகளில் போதிய வாகன பார்க்கிங் வசதியோ, கட்டடங்களுக்கு இடையே உரிய இடைவெளியோ இல்லாமல் ஏராளமான வணிக வளாகங்கள் முளைத்துள்ளன. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பரப்பளவை மீறி பல நிறுவனங்கள் கட்டடங்களை விரிவாக்கம் செய்துள்ளதால், நகரின் எதிர்கால உள்கட்டமைப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

அபராதம் அவசியம்


இந்திய கட்டுமான வல்லுனர் சங்க (பி.ஏ.ஐ.) டி.டி.சி.பி. குழுவின் துணைத் தலைவர் பழனிசாமி கூறியதாவது:தமிழகத்தில் தற்போது 'விதிமீறல்' என்று சுட்டிக்காட்டப்படும் பெரும்பாலான கட்டடங்கள் 2019-ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்டவைதான். போதிய காலியிடம் விடாதது, பார்க்கிங் வசதி இல்லாதது, அனுமதி பெற்றதை விட கூடுதல் தளங்களை எழுப்பியது என இதில் பல குறைபாடுகள் உள்ளதால், ஏராளமான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. 2019-க்கு முன் விதிமீறி கட்டப்பட்ட இந்தக் கட்டடங்களை முறைப்படுத்த, சாதாரண கட்டணத்தை விட இரு மடங்கு அபராதம் விதிக்க வேண்டும். இதனால் அரசுக்குக் கூடுதல் வருவாய் கிடைப்பதுடன், எதிர்காலத்தில் தவறுகள் நடப்பதும் தவிர்க்கப்படும்.

முளையிலேயே கிள்ளலாம்


கடந்த 2019-ம் ஆண்டுக்குப் பின் கட்டப்படும் பொதுக் கட்டடங்களுக்கு 'பின்தொடர் சான்றிதழ்' பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கட்டடத்தின் அடித்தளப் பணிகள் முடிந்ததும் ஒரு சான்றிதழும், கட்டடம் முடியும் தருவாயில் மற்றொரு சான்றிதழும் பெற்றால் மட்டுமே 'இறுதி பின்தொடர் சான்றிதழ்' கிடைக்கும். இந்த அடுக்கு-நிலை சோதனைகள் மூலம் கட்டுமானத்தின் ஆரம்பத்திலேயே விதிமீறல்களைக் கண்டறிந்து சரி செய்ய முடியும்.

மேலும், பொதுமக்கள் அதிகாரிகள் பின்னால் அலையாமல் 'ஆன்லைன்' மூலம் எளிதாக அனுமதி பெற 3,500 சதுர அடி பரப்பளவு வரை 'சுய சான்று கட்டட அனுமதி' திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த முறையில் கட்டப்படும் கட்டடங்களை அதிகாரிகள் முறையான இடைவெளியில் கள ஆய்வு செய்து கண்காணித்தால், விதிமீறல்களை ஆரம்பத்திலேயே முளையிலேயே கிள்ளியெறியலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

விதிமீறல் கட்டடங்கள்கண்டறிய வேண்டும்

''திருப்பூரில் முறையான அனுமதியின்றி கட்டடங்கள் கட்டப்படுவதால் அரசுக்கு வரி வருவாய் பெருமளவில் இழக்கப்படுவதுடன், தீ விபத்து போன்ற அவசர காலங்களில் மீட்புப் பணிகளிலும் சுணக்கம் ஏற்படும். எனவே, கட்டடங்களுக்கு இடையே குறைந்தபட்சம் 6 மீட்டர் இடைவெளி விட்டு கட்டப்பட வேண்டும் என்ற விதியை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில் மட்டும் உள்ள நுாற்றுக்கணக்கான விதிமீறல் கட்டடங்களை முறையாகக் கண்டறிந்து வரன்முறைப்படுத்தி அபராதம் வசூலித்தால், அரசுக்குக் குறைந்த பட்சம் 200 கோடி ரூபாய் வரைவருவாய் கிடைக்கும்.

திருப்பூரின் உட்கட்டமைப்பை மேம்படுத்த திருப்பூர் கட்டுனர் மையம் முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளது'' என்று கூறுகிறார்,

பி.ஏ.ஐ. டி.டி.சி.பி. குழு துணைத்தலைவர் பழனிசாமி.

Image 1589830


மாஸ்டர் பிளான் அவசியம் திருப்பூர் அசுர வேகத்தில் வளர்ந்து வந்தாலும், அதற்கேற்ற சாலை வசதிகள் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் பெரும் சவாலாக உள்ளது. இதற்குத் தீர்வாக, மாநகரின் முக்கியப் பகுதிகளான அவிநாசி ரோடு, பி.என். ரோடு போன்ற இடங்களில் 'மாஸ்டர் பிளான்' விதிப்படி, பனியன் நிறுவனங்களின் சரக்குப் போக்குவரத்து பயன்பாட்டிற்காகத் தனியாகப் 'போக்குவரத்து முனையம்' உருவாக்க வேண்டும். இதனால் வெளி ஊர்களில் இருந்து வரும் கனரக லாரிகள் நகருக்குள் நுழைவது தவிர்க்கப்பட்டு, போக்குவரத்து நெரிசல் தானாகவே கட்டுக்குள் வரும்
- பழனிசாமி, துணைத்தலைவர்,

இந்திய கட்டுமான வல்லுனர் சங்க (பி.ஏ.ஐ.) டி.டி.சி.பி. குழு.
.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us